அட இது கேரளா எல்லாம் இல்ல! மதுரையில இது எந்த இடம் தெரியுமா? வைரலாகும் புது வீடியோ!

அட இது கேரளா எல்லாம் இல்ல! மதுரையில இது எந்த இடம் தெரியுமா? வைரலாகும் புது வீடியோ!

தெற்கு ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தது. அந்த வீடியோ ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியாக இருந்தது அதில் சாலைக்கு அருகே உள்ள ரயில்வே பாதையில் ரயில் ஒன்று வந்து கொண்டிருப்பதாக இருக்கிறது. இந்த வீடியோ பலரை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து என்பது பொது போக்குவரத்து ஒரு முதுகெலும்பாக இருக்கிறது. மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயிலைதான் தேர்வு செய்கிறார்கள். ரயில்தான் சொகுசான அதே நேரம் குறைவான செலவில் பயணம் செய்யும் வாகனமாக இருக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து செயல்படும் ஆயிரக்கணக்கான ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது தங்கள் கட்டுமான வசதிகளையும் பயணிகளுக்காக அவர்கள் செய்துள்ள மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவார்கள். அப்படியாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தது. அந்த வீடியோவில் சாலைக்கு அருகே உள்ள ரயில் பாதையில் ரயில் வருவது போல வீடியோ அமைந்திருந்தது.

இந்த வீடியோ மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவாகும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரயில்வே நிர்வாகம் மதுரை கப்பலூர் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

இந்த வீடியோ பார்க்க ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஒரு பக்கம் குளம் அதை ஒட்டி சாலை, அதையடுத்து ரயில்வே பாதை அதன் பின்னர் திருப்பரங்குன்றம் ஊர் பகுதி மற்றும் திருப்பரங்குன்றம் மலை ஆகியவை இந்த வீடியோவில் தெளிவாக தெரிகின்றன. இந்த வீடியோ காட்சியை ரயில்வே நிர்வாகம் ட்ரோன் மூலம் எடுத்துள்ளது. மிக அழகாக இருக்கும் இந்த பகுதியை அதன் அழகை வெளிப்படுத்துவதற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து உள்ள ரயில்வே நிர்வாகம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அழகை வித்தியாசமான கோணத்தில் கண்டு ரசியுங்கள் என இதை பகிர்ந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து இது எந்த இடம் என கருத்திட்டு வருகின்றனர்.

தென் மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கிய ரயில் பாதையாக இந்த திருப்பரங்குன்றம் ரயில் பாதை இருக்கிறது. மதுரையிலிருந்து தென்தமிழக பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி வழியாக தினம் தோறும் ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன.

பொதுவாகவே இந்த பகுதி வழியாக ரயிலில் பயணிக்கும் போது மிக ரம்மியமான காட்சியை நம்மால் காண முடியும் .அதையும் தற்போது கூடுதல் அழகு சேர்த்து ட்ரோன் மூலம் வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார்கள். இந்த வீடியோவில் பதிவாகியுள்ள பாலத்திற்கு அடியில் ரயில் செல்லும் காட்சி காண்பவர்களை அவரும் விதமாக இருக்கிறது.

தெற்கு ரயில்வே நிர்வாகம் இதுபோன்று தொடர்ந்து தென் இந்தியாவில் உள்ள அழகான ரயில் பாதைகளை எல்லாம் வீடியோவாக எடுத்து பதிவு செய்து வருகின்றன. அதன்படி தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள இந்த பகுதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி வழியாக நீங்கள் ரயில் பயணித்திருந்தால் உங்கள் அனுபவங்கள் என்ன என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!