திருப்பரங்குன்றத்தில் ஒரே ஆண்டில் 2 முறை “சொர்க்க வாசல்” திறப்பு… அறுபடை வீடுகளில் நடந்த அரிய நிகழ்வு! முருகன் கோவிலில் ஒலித்த “கோவிந்தா” கோசம்!
வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வைகுண்ட ஏகாதசி திருநாளில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது!
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் கருவறையில் உள்ள 5- சன்னதியில் ஒன்றான பவளக்கனிவாய் பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. கோவிலுக்குள் மடப்பள்ளி அருகே உள்ள பெரிய கதவு எப்போதும் நடை திறந்து இருக்கும் ஆனால் வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டும் பெரிய கதவு சாத்தப்பட்டு சந்தனத்தால் நாமம் போட்டு அலங்கரிக்கப்பட்டு, உற்சவர் சன்னதியில் பவளக்கனிவாய் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று உற்சவர் சன்னதியில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் (பெரிய கதவு) திறக்கப்படும் அதன் வழியே பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா… கோவிந்தா” என கோஷமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியக்கூடிய அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றத்தில் மட்டும்தான் வைகுண்ட ஏகாதசி திருநாளில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வைகுண்ட ஏகாதசி:
முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு 2023ஆம் ஆண்டில் ஜனவரி 02 மற்றும் டிசம்பர் 23 என இரண்டுமுறை நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.