சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது இதனையொட்டி ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது இதில் ஏராளமான பெண்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர் மாப்பிள்ளை பெண் அழைப்பு தொடர்ந்து ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனக நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் ராமர் சீதா கல்யாணம் நடந்தது இதில் சோழவந்தான் பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மொய் எழுதி உணவருந்தி சென்றனர். திருக்கல்யாண ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுதா, தக்கார் அங்கையற்கன்னி, கணக்கர் முரளிதரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!