Accident: நாகமலை புதுக்கோட்டை அருகே இரண்டு லாரி மோதி விபத்து… சம்பவ இடத்திலேயே டிரைவர் பலி.

நாகமலை புதுக்கோட்டை அருகே வடிவேல் கரை பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பொள்ளாச்சியில் இருந்து கோவில்பட்டிக்கு கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி நாகமலை புதுக்கோட்டை அடுத்து வடிவேல் கரை பாலத்திற்கு அருகே டயர் வெடித்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சுண்டல் ஏற்றி அவ்வழியே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, நின்று கொண்டிருந்த கோழித்தீவனம் ஏற்றி வந்த லாரியின பின்னால் மோதியதில் அவ் வாகனத்தை ஒட்டி வந்த தருமபுரியை சார்ந்த டிரைவர் பெரியசாமி 41/2023 சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்த மோட்டார் வாகன நிலையை அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு & பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவினரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி லாரியில் சிக்கி இருந்த உடலை மீட்டு நாகமலை புதுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் உடல் கூறு ஆய்வுக்காக மதுரை ராசாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸ் சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி.காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!