
பொழப்புக்காக..ரஜினி பிறந்தநாள்… மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் ஒட்டிய போஸ்டர் வைரல்!

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ரசிகர்கள் போட்டிருக்கும் வித்தியாசமான போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கோலிவுட்டில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில், அனிரூத் இசையில், இவருடைய நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர்.
அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல பிறந்தநாள் டீசர் வீடியோவும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை இன்று 12ஆம் தேதி கொண்டாடவுள்ளார். அதனை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மதுரை ரஜினி ரசிகர் ஒருவர் “பொழப்புக்காக ரசிகன் இல்ல.. பொறந்ததுல இருந்தே ரஜினி ரசிகன்” என்று அவரது ரசிகர் ஒருவர் தனது புகைப்படத்துடன் போஸ்டர் அச்சிட்டு தனது ஆட்டோவில் ஒட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் பகிர்ந்து வருவதால் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் மற்றும் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.