மதுரை ரயில் நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு… மற்ற மொழிகளில் அறிவிப்பு பலகை… நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்?

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதுரை ரயில் நிலையம் தமிழகத்தின் பெருமைமிகு சின்னங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. மதுரை மீனாட்சி கோயில், அழகர் கோயில் முதலிய பிரபலமான கோயில்கள் உள்ள கோயில் நகரமாகவும் திகழ்வதால் இங்கு சுற்றுலா பயணிகள் வருகையும் மிக அதிகம். மதுரை ரயில் நிலையத்திற்கு தினமும் சராசரியாக 96 ரயில்கள் வந்து செல்கின்றன.

மதுரை சந்திப்பு தென்னிந்தியாவில் பெருமைமிகு சின்னங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. மதுரை மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர் கோயில் முதலிய பிரபலமான கோயில்கள் உள்ள கோயில் நகரமாகவும் திகழ்வதால் இங்கு சுற்றுலா பயணிகள் வருகையும் மிக அதிகம். ஒரு குறிப்பிடத்தக்க ரயில் நிலையம் மற்றும் இது நகரின் ரயில்வே கோட்டத்தின் தலைமையகமாகும். இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை, 1875 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு செல்லும் முதல் ரயில் பாதையுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தைப் பெற்றது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு 1969 ஆம் ஆண்டு முதல் விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, மதுரை சந்திப்பு, புது தில்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூர், ஹவுரா, சென்னை, கோயம்புத்தூர், பாட்னா, திருநெல்வேலி போன்ற நகரங்களில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களுக்கும் எக்ஸ்பிரஸ் லைன்களின் விரிவான நெட்வொர்க் வழியாக நகரத்தை இணைக்கிறது. இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் சராசரியாக 96 ரயில்கள் வந்து செல்கின்றன.மதுரை சந்திப்பு இந்திய ரயில்வே துறையால் A1 ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த ரயில் நிலையம் நாட்டிலுள்ள 100 சிறந்த முன்பதிவு நிலையங்களில் ஒன்றாகும். அதிகாரப்பூர்வ குறியீடு MDU மூலம் அறியப்படுகிறது, இது நாட்டின் முக்கிய நிலையங்களில் ஒன்றாகும், மேலும் மதுரை சந்திப்பு அதன் முன்மாதிரியான செயல்பாட்டிற்காக அரசாங்கத்தால் வெகுமதி பெற்றது.

மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் (MDU) இருக்கும் வசதிகள், எஸ்கலேட்டர்கள்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு,கணினி முன்பதிவு மையங்கள்,பேக்கேஜ் கவுண்டர்,பெரிய வங்கிகளின் 24 மணி நேர ஏடிஎம் சாவடிகள், IRCTC இ-டிக்கெட் முன்பதிவு கவுண்டர், ஏ/சி ஓய்வறைகள், உணவகங்கள் மற்றும் உணவு பிளாசாக்கள், கழிப்பறைகள், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட், ஆடை அறை மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச வாகனங்கள் பயண அலுவலகங்கள் என பல்வேறு வசதிகள் இருந்தாலும் இது போன்ற வசதிகள் எல்லாம் பயணிகள் தெரிந்துகொண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதில் தான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. ஒன்றாவது நடைமேடையில் குளிரூட்டப்பட்ட காத்திருக்கும் அறைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் தமிழ் இல்லாமல் 1st platform என ஆங்கிலத்திலும் அதனை அடுத்து கீழே மலையாளத்திலும் அதனை அடுத்து கீழே இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது குறித்து சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். இது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு என்றும் ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு என்றும் கண்டித்துள்ளனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழுக்கு இடமில்லையா? எனவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் ரயில் நிலையத்தில் தமிழில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். கூடுதலாக வேண்டுமானால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் தற்போது இப்படி வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையால் ஆங்கிலம், மலையாளம், இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே அறிய முடியும் எனவே, ரயில்வே நிர்வாகம் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து தமிழை இடம்பெறச் செய்ய வேண்டுமென அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.மேலும் ரயில் நிலையங்களில் இது போன்று மற்ற இடங்களிலும் தமிழ் அல்லாமல் மற்ற மொழிகள் இடம் பெற்றிருப்பின் அதையும் கூடுதல் கவனம் செலுத்தி தமிழ் மொழியை இடம் பெற செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.