
தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலஎடுப்பு சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 1999)ன்
பிரிவு 3(2)ன்கீழ் நிலஎடுப்பிற்கான முதல்நிலை பொது அறிவிப்பு:
நாள்: 09.09.2023.
கீழ்காணும் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதும். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், நிலையூர் 1 மற்றும் 2 பிட் கிராமங்கள்
மற்றும் திருமங்கலம் வட்டம் சொக்கநாதன்பட்டி கிராமம் ஆகிய மூன்று கிராமங்களில் புலஎண்கள். 162/1 மற்றும் பலவற்றில் அமைந்துள்ள நிலங்கள் தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலஎடுப்பு சட்டம் 1997ன் (தமிழ்நாடு சட்டம் 10/1999) பிரிவு 3(2)ன் கீழான அறிவிப்பிற்கிணங்க,
ஒரு தொழிலியல் நோக்கத்திற்காக, அதாவது மதுரை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு திரவ வடிவிலான
பெட்ரோலியம் வாயு நிரப்பப்படும் ஆலை வரை புதிய இரயில் வழித்தடம் அமைக்கும் பணிக்கு தேவைப்படுகின்றன என்று அறிவிக்கப்படுகிறது.

நிலஎடுப்பு செய்யப்படவுள்ள நிலம் குறித்து பாத்தியதை உள்ள அனைவரும் இந்நிலஎடுப்பு தொடர்பான தங்களின் கோரிக்கைகளையோ அல்லது
ஆட்சேபனைகளையோ, இவ்விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 (முப்பது) நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து
மூலமாக அளிக்க வேண்டியது.
எந்த ஒரு ஆட்சேபனையோ அல்லது கோரிக்கையோ குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரப்பெற்றாலோ அல்லது நிலபாத்தியதாரர் அந்நிலத்தின்
மீதான உரிமை தொடர்பான ஆதாரங்கள் அத்தனையும் தெரிவிக்கத் தவறிவிட்டாலோ அந்த ஆட்சேபனை / கோரிக்கை நிராகரிக்கப்படும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் வரப்பெற்ற ஆட்சேபனைகள் மீது 17.10.2023ம் தேதியன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்பகல் 11.00 மணியளவில் விசாரணை மேற்கொள்ளப்படும். அச்சமயம், நேரிலோ அல்லது ஆவணச் சான்றுகளையோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி வாய்மொழியாகவோ அல்லது ஆவணச் சான்றுகளையோ அவர்களிடம் ஆட்சேபனைக்கு அடையாளமாக தாக்கல் செய்யத் தெரிவிக்கப்படுகிறது.
நில வகைப்பாடு அட்டவணை நில எடுப்பு செய்யும் புலத்தில் உள்ள
கட்டுமானங்களின் விவரம் நில எடுப்பு புலத்தில் உள்ள மரங்கள் /பயிர்களின் விவரம் நில உரிமையாளர் மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் விவரம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.