‘அந்தியோதயா’ ரயில் முன்னால் தொங்கி வந்த மனித உடல்… அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!

ரயில் முன்னால் தொங்கி வந்த மனித உடல் … அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!

சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா 20691 எண் கொண்ட ரெயில் நேற்று இரவு 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் இன்று காலை 8.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம், 9.05 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையம் இதையடுத்து 9.15 மணி அளவில் கள்ளிக்குடி ரெயில் நிலையம் வந்தபோது என்ஜினின் முன் பகுதியில் மனித உடல் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதனை கண்ட பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் என்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த உடலை அப்புறப்படுத்தினர். இதனால் அந்தியோதயா ரெயிலானது 20 நிமிடங்களுக்கு மேலாக கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து என்ஜினின் முன்பகுதியில் சிக்கியிருந்த உடல் பாகங்கள் நீக்கப்பட்டு பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், மதுரை திருமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற போது என்ஜினின் முன் பகுதியில் உடல் பாகங்கள் சிக்கி இருக்கலாம். மேலும் அந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வேறு ஏதும் காரணம் உண்டா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனைக்கு பின் அவர் யார் என்பது குறித்து விவரம் தெரியவரும் என்றனர். ரெயில் முன்னால் மனித உடல் தொங்கி வந்ததால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!