மாட்டு வண்டியில் வந்து வேல் ஏந்தி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்

மாட்டு வண்டியில் வந்து வேல் ஏந்தி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்க்க படும் நிலையில் தமிழகத்தின் முக்கிய தொகுதியாக விருதுநகர் ஸ்டார் தொகுதியாக திகழ்கிறது.

விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளராக நாம் தமிழர் கட்சியை வேட்பாளர் கௌஷிக் திருப்பரங்குன்றம் தோப்பூர் பகுதியில் கையில் வேல் ஏந்தி மாட்டுவண்டியில் ஊர்வலம் வந்து நடந்து சென்று மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசியை சேர்ந்த இளம் வயது மருத்துவர் கௌஷிக் போட்டியிடுகிறார் .

இந்த நிலையில் இன்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி கூத்தியார் குண்டு தோப்பூர் மூனாண்டிபட்டி மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் வீதி வீதியாக நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி மைக் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.

முன்னதாக கூத்தியார் குண்டு விலக்கு பகுதியில் நான்கு வழிச்சாலையில் மாட்டு வண்டியின் மீது ஏறி நின்று கையில் வேல் ஏந்தி ஊர்வலமாக வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!