

திருவள்ளுவர், நம்மாழ்வருடன் வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர் மருத்துவர் கௌஷிக்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கௌஷிக் என்பவர் போட்டியிடுகிறார். நாளை மறுநாள் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேட்பாளர் டாக்டர் கௌஷிக் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்று பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து தனக்கன்குளம், நாகமலை புதுக்கோட்டை, திருநகர், ஹார்விப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திருவள்ளுவர் மற்றும் நம்மாழ்வார் வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பாளர் கௌஷிக் பிரச்சார வாகனத்தில் நின்றபடியும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் சென்ற படி மைக் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பதால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.