
பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு,போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தாளாளர் கிறிஸ்டோபர் தலைமையில் முதல்வர் மகிழ்ச்சி மன்னன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.இந்நிகழ்வில ஆசிரியர்கள், 3000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
த
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.