பெற்றோர்களே உஷார்: உங்கள் வீட்டு குழந்தைகள் வாசலில் விளையாடும் பொழுது கவனமாக இருக்கவும் -CCTV காட்சிகள்

மதுரை தெற்கு மாசி வீதியில் சிறுமியிடமிருந்து முக்கால் பவுன் தங்க வலையலை திருடிய பெண்மணி கைது செய்யப்பட்டார்.

மதுரை தெற்கு மாசி வீதியில் வசிக்கும் அழகர் (40) என்பவர் நகைபட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் இரண்டு மகள்களான ரித்மிக்கா (7) மற்றும் குறள் வெண்பா (2) ஆகியோர் வீட்டின் முன்பாக நடைபாதையில் நேற்று முன் தினம் மாலை 4.45 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மூத்த மகள் தனது தந்தையிடம் குறள் வெண்பாவின் இடது கை வலையலை காணவில்லை என்று கூறியுள்ளார்.

உடனே விளையாடிய பகுதியில் தேடியபோது கிடைக்கவில்லை என்பதால் அவர் தெற்குவாசல் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு வாசல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜக்குபாய்,சார்பு ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, காவலர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ஜெய பிரபாகரன் ஆகியோர் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

அப்போது ஒரு பெண்மணி சிறுமியின் கையிலிருந்து வலையலை திருடும் காட்சியை கண்டு பெண்மணியை பற்றி விசாரித்த போது அவரது பெயர் வெங்கடேஸ்வரி (57) என்றும் திருமணமாகாதவர் என்றும் தலையாரி குருநாதன் கோவில் அருகே வசித்து வருவதாகவும் தெரிந்தது. அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் முக்கால் பவுன் தங்க வலையலை பறிமுதல் செய்து பெண்மணியை நேற்று கைது

செய்தனர்.

ஜெயசெளந்திரபூரணி – மதுரை மாவட்ட செய்தியாளர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!