அடுத்தமுறை மோடி பிரதமராக ஆனால்… சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் இந்தியாவில் யாரும் வாழ முடியாது -சீமான் மதுரையில் பேட்டி

அடுத்தமுறை பாரத பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுத்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் இந்தியாவில் யாரும் வாழ முடியாது – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பு மறுசீராய்வு செய்து வலிமைப்படுத்தி எதிர்வரும் தேர்தலுக்கு அணியப்படுத்துவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட வாரியாக தொகுதி கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட பயணத் திட்டத்தில் இன்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்றது அதில் மதுரை மேற்கு தொகுதி மதுரை தெற்கு தொகுதி சோழவந்தான் தொகுதி உசிலம்பட்டி தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதி என 10 தொகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியதாவது: தமிழகத்தில் கடலூரில் விவசாய நிலங்களை அழித்து NLC நிலம் கையகப்படுத்துகிறதுவிவசாயிகளை இந்த மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிக்கிறதுவிவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கிறார்கள், NLC அமைக்கிறார்கள் இது நல்லதா விவசாயங்களை அழிப்பது ஏற்பது அல்ல அண்ணாமலை ஆளுநரை சந்திக்கிறார்அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை பேசுகிறார்

திமுகவினர் ஊழல் பட்டியல் வெளியிடும் அண்ணாமலை அதிமுகவினர்கள் செய்த ஊழல்பட்டியல்களை ஏன் வெளியிடவில்லைஅதிமுகவினர்கள் புனிதர்களா? கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றியும் வாய் திறக்கவில்லை அங்கே 24 மணிநேரமும் மின் இணைப்பு இருக்கும் அங்கே மின் இணைப்பை துண்டிக்க சொன்னது யாரு ? மணீப்பூர் கலவரம் பற்றி திமுகவினர் பேசுவது புனிதமாகுஜராத் கலவரத்தை பற்றி கருணாநிதி நியாய படுத்தி அப்போதய கருணாநிதி தலைமையிலான திமுகவினர் பேசினர் இப்போ எதிராக பேசுகின்றனர்தமிழகத்தில் நூலகம், பல்நோக்கு மருத்துமனை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்கின்றார்.

ஸ்டாலின்டாஸ்மாக் கடைக்கு ஏன் கருணாநிதி டாஸ்மாக் கடை என பெயர் வைக்கவில்லை ஸ்டாலின்தமிழக மீன்வர்கள் கைது குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளாரே என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் ஒரு போஸ்ட்மேன் தான் என்றார்காங்கிரஸ் திமுகவினர் கூட்டும்அதிமுகவும் – பாஜகவும் கூட்டு ஒட்டு அரசியலுக்காக தமிழகத்தில் பல திட்டங்களை தருவதாக தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் முன்னால் ips அதிகாரி பயிற்சியின் போது நடைபயற்சி போகிருப்பார்உடல் நலம் சரியில்லாமல் இருக்கலாம் உடல் FIT ஆக இல்லை போலதற்போது உடலை FIT ஆக நினைத்து நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

அண்ணாமலை இதன் மூலம் தமிழகத்தில் தாமரை மலராதுதண்ணீரில் தான் தாமரை மலரும் தமிழகத்தில் தாமரை மலராது என்றார்தேர்தலுக்காக 70 ஆயிரம் பணி நியமன ஆணை என்ன இன்னும் பாருங்க என்ன வாக்குறுதி எல்லாம் மோடி தருவார் என்று சொல்லி வாக்கை பெற்று தமிழகத்தை துண்டாட பார்கின்றனர் பிரதமர் மோடிசந்திரயான் பற்றி மோடி பாராட்டி பேசிவருகின்றார்அங்கே குடியோக நினைத்தால் முதலில் பிரதமர் மோடி யாரை அனுமதிப்பார் இந்துக்களையா?, முஸ்லிம்களையா? கிறிஸ்தவர்களையா என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கூறவேண்டும் என்றார்பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்து என்ன தமிழகத்திற்கு செய்து தமிழகத்தையும் தமிழக மக்களையும் ஏமாற்றி தமிழகத்தை தனியார் துறைக்கு தாரை வார்த்து வஞ்சிக்க உள்ளது அடுத்த பிரதமராக மோடி வந்தால் இந்தியாவை அழித்து விடுவார் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!