
திருப்பரங்குன்றம் அருகே பாலசுப்ரமணியன்நகரில் விநாயகர் வருஷாபிஷேகம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பால கணபதி திருக்கோயிலில் கடந்த 30-11-2017 ஆம் தேதி, தமிழ் வருடம் ஹேவிளம்பி, கார்த்திகை மாதம் 14 ஆம் தேதி, வியாழக்கிழமை மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வருடம் தோறும் வருஷாபிஷேகம் நடத்துவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக இன்று 24-11-2023 6ஆம் ஆண்டு வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான ஆன்மீக பெரியோர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.