
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டி ஊராட்சி துணைக்கோள் நகரம் சிவன் கோவில் அருகே கான்கிரீட் பெயர்ந்த நிலையில் கம்பிகள் வெளியே தெரிந்தவாறு, எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் மின்கம்பம் ஆடிக் கொண்டிருக்கிறது.

பெரும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் மின்சாரத் துறையினர் உடனடியாக புதிய மின் கம்பத்தை மாற்றி அருகில் இருக்கக்கூடிய அனைத்து மின் கம்பங்களும் நல்ல நிலையில் உள்ளதா என சோதனை செய்து பழுதான மின்கம்பத்தை சரி செய்யவும் உடைந்த மின்கம்பத்தை புதிதாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் விடுத்து வருகின்றனர்
.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.