திருப்பரங்குன்றம் அருகே கணவனை சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி.

திருப்பரங்குன்றம் அருகே கணவனை சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்து செய்த மனைவி.

மதுரை மாவட்டம்
திருமங்கலம் அருகே குடும்ப தகராறில் கணவனை செல்போன் சார்ஜ்சரால் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள கூத்தியார்குண்டு ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் காளிதாஸ் (34). மனைவி ஜெயா (34). தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இருவரும் கப்பலூர் சிட்கோவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம்.

காளிதாஸ் மனைவி ஜெயாவுடன் கடந்த சில நாட்களாக சண்டை போட்டுள்ளார். இதனால் ஜெயா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பக்கத்து வீட்டு மாடியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற காளிதாஸ் கீழே விழுந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காளிதாஸ் வந்துள்ளார் அப்போது வீட்டிற்கு ஜெயா வந்தார்.

அப்போதும் காளிதாஸ் கோபத்தில் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயா நேற்று காலை 4 மணியளவில் தனது கணவன் கழுத்தை செல்போன் சார்ஜர் வயர் கொண்டு சுற்றி நெரித்துள்ளார். இதில் மூச்சு திணறி வாலிபர் காளிதாஸ் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஆஸ்டின் பட்டி போலீசார் வாலிபர் காளிதாஸ் உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி ஜெயாவை கைது செய்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!