
மதுரை கிழக்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை நினைவு கூறும் விதமாக போரின் இறுதி நாளான மே 18 இல் இனப்படுகொலை நாளாக உலகம் முழுதும் பரவி வாழக்கூடிய தமிழர்களால் அனுசரிக்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் குருதி கொடை பாசறை சார்பாக மாநிலம் தழுவிய ரத்ததான முகாம்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இன்று அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மதுரை கிழக்கு மண்டலம் சார்பாக கடச்சனேந்தலில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 55 க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் கொடுத்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மண்டல செயலாளர் மு.அப்பாஸ், திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து, தெற்கு தொகுதி செயலாளர் காசிமாயன், வடக்கு தொகுதி செயலாளர் மலைச்சாமி, சிவக்குமார் கிழக்கு தொகுதி செயலாளர் ரத்னவேல் பாண்டியன், மேலூர் தொகுதி துணைத் தலைவர் இன்பரசன், குருதிக்கொடை பாசறை மாவட்டச் செயலாளர் நவீன் கண்ணன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மை. சாராள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.