கருப்பட்டி டாஸ்மாக்கில் காலையிலேயே கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பதாக பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அரசு மதுபான கடைகள் இரண்டு கடைகள் உள்ளது இந்த கடைகளில் அதிகாலை முதலே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பதாகவும் குடிபோதையில் மது பிரியர்களால் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் குறிப்பாக கருப்பட்டி வெற்றிலை கொடிக்கால் சங்கம் அருகில் உள்ள அரசு மதுபான கடையில் காலை முதலே கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பதாகவும் இதற்கு அரசு மதுபான கடையின் பணியாளர்கள் மறைமுகமாக உதவி செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஏற்கனவே இந்த இரண்டு மது கடைகளிலும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது கத்தியை காட்டி டாஸ்மாக் ஊழியரை மிரட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றது இந்த நிலையில் காலை முதல் மதுபானங்கள் விற்பதால் பணிகளுக்கு செல்லும் பெண்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது தினசரி காலையில் இந்த மதுக்கடைகள் முன்பு பத்துக்கும் மேற்பட்டோர் மது பாட்டில்கள் வாங்க கூட்டம் கூட்டமாக வருவதால் ட
மதுரை மண்டல டாஸ்மாக் மேலாளர் நேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த மது கடைகளை அப்புறப்படுத்தி வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!