Pt Sir திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Pt Sir

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளரும் நடிகருமானவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் நடிப்பில் கடந்த வாரம் Pt Sir எனும் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை ஐசரி கே. கணேஷ் தயாரித்து இருந்தார்.

இசையமைப்பாளராக இது ஹிப் ஹாப் ஆதிக்கு 25வது திரைப்படமாகும். இப்படத்தை கார்த்திக் வேணுகோபால் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pt Sir திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pt Sir Movie Box Office Collection

காஷ்மீரா, அனிகா, தியாகராஜன், இளவரசு, பிரபு, பாக்கியராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் Pt Sir திரைப்படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.

வசூல் விவரம்

முதல் மூன்று நாட்களில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்திருந்த Pt Sir திரைப்படம், தற்போது 6 நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pt Sir திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pt Sir Movie Box Office Collection

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான வசூல் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூலை வாரிக்குவிக்க போகிறது என்று

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!