
மதுரை மாவட்டம்
மேலூர் அருகே தும்பைப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில், சிவகாசியில் இருந்து சென்னை நோக்கி பெண்கள் உட்பட 38 பயணிகளுடன் தனியார் சொகுசு ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், பேருந்தை மதுரை வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பரமேஸ்வரன் என்பவர் இயக்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் பொழுது, சாலையின் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார். இதனால் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், சிவகாசி அருகே சாத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த, மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் மருத்துவ உதவி குழுவினர், விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக, அப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் உடனடியாக மீட்பு வாகனம் மூலம் சாலையின் குறுக்கே கவிழ்ந்த பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ததுடன், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.