PT Sir
சமீபத்தில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது PT Sir திரைப்படம். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருந்தனர்.

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து பேசும் படமாக PT Sir உருவாகி இருந்தது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க காஷ்மீரா, அனிகா, தியாகராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று இப்படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷுடன் ஹிப் ஹாப் ஆதி மற்றும் இயக்குனர் கார்த்தி வேணுகோபாலன் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை கூட தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் வெளியிட்டு இருந்தார்.
வசூல்
இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடுத்துள்ள Pt Sir திரைப்படம் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.