
மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் பெண் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி!
மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருகின்றனர். பாத்திமா மேரி அண்ணன் அந்தோணி செல்வராஜ் உடன் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க கைரேகை வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மீனாட்சி பஜார் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது நான்கு சக்கர வாகனத்தில் ராஜசேகர் என்பவர் தனக்கன்குளம் பகுதியில் இருந்து அதிவேகமாக வரும் போது பாத்திமா மேரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
சம்பவம் அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்திய ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.