மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம்… மதுரையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது!

மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம்… மதுரையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் 1வது பேருந்து நிலையத்தில் மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கியவிவசாயிகள் முன்னணி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.

இதில் சிஐடியுவின் மாநில பொதுச் செயலாளர் ஐடா ஹெலன் தலைமை தாங்கினார். CITU, AIKS, AIAWU, DYFI, AIDWA,SFI,SKM இதில் நல வாரியத்தில் அழிந்து போன 70 லட்சம் தொழிலாளர்களின் ஆவணங்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டியும், மின்சாரத்தை தனியாருக்கு தாரை பார்க்கக் கூடாது, ஓட்டுனர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற வேண்டியும், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும் எனவும், 100 வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தினசரி சம்பளம் 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு
கோசங்களை எழுப்பினார்கள்.

இதில் பொன்.கிருஷ்ணன், வி. பிச்சை ராஜன், எஸ். எம்.பாண்டி. என்.காளிராஜன். எம். சித்திரவேல், பா.மகாலட்சுமி, சி. பாண்டியன், P. அய்யாவு , N.ராதாகிருஷ்ணன், M. செந்தில்குமரன், ம.தேவேந்திரன். M. ரமேஷ், S.சதீத்தாரப்பன், V. கருப்பசாமி, V.திருதரன், பி.ஈஸ்வரி, P.போதுமணி மற்றும் கப்பலூர் HP லோடுமேன் சங்க நிர்வாகிகள் வேல்முருகன், நாகேஷ், சசிக்குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தோட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!