
இது தேவையா? லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ கைது!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலரான ரம்யா இவா் பட்டா மாறுதலுக்காக ரூபாய் 9000 பெற்றமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த முத்து பேய தேவர் இவருக்கு உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டியில் 34 சென்டு இடம் உள்ளது. இந்த இடத்தை இவரது மகன் காசிமாயன் என்பவருக்கு மாற்றுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். வருவாய்த்துறை அதிகாரிகள் சரியாக பதிலளிக்காத காரணத்தினாலும் கடந்த வாரம் விஏஓ ரம்யா அவர்கள் 9000 லஞ்சம் கேட்டுள்ளார். இதை இதனை தர மறுத்த முத்து பேயத் தேவர் அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கே .எஸ். பி .சத்தியசீலன் அவர்களது அறிவுறுத்தலின்படி 9000 ரொக்கத்தில் ரசாயனம் கலந்த பவுடரை பூசி அனுப்பி வைத்தனர்.அதனை தொடர்ந்து விஏஓ ரம்யா அவரது அலுவலகத்தில் அவர் முத்து பேயத் தேவர் என்பவரிடமிருந்து பணம் வாங்கும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அன்பு ஜெயராஜ் தலைமையிலான குழு அவரை கைது செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.