
மதுரையில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… சேவல் வந்ததும் நடந்த ஆச்சர்யம்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் விளாச்சேரி ஊராட்சி ஆதிசிவன் கோயில் அருகே ரமேஷ் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இன்று காலை மாட்டிற்கு வைக்கோல் எடுக்க என்ற போது அடியில் பாம்பு இருந்ததை கண்டு அச்சமடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருநகர் பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுவை தொடர்பு கொண்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபு அந்த பாம்பை மீட்க பல வழியில் போராடினார் அப்போது மிகவும் ஆக்ரோசமாக இருந்த பாம்பு தலையை தூக்கி சீறிக்க்கொண்டே இருந்தது. அப்போது அவ்வழியே சேவல் ஒன்று பாம்பை சுற்றிச் சுற்றி வந்தது. மார்கழி மாதம் அதுவும் பெளர்ணமி நாளான இன்று முருகனின் வாகனமான சேவல் மற்றும் பாம்பையும் ஒரே நேரத்தில் காண்பது எல்லாம் முருகன் அருள் என்று வியப்புடன் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
பின்னர் பல முயற்சிக்கு பின் லாலகமாக மீட்டு நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள வனப்பகுதிக்குள் விடுவித்தார். இது குறித்து ஸ்நேக் பாபு கூறுகையில்: இந்தப் நல்லபாம்பு சுமார் 6 அடி நீளம் இருந்திருக்கும் பின் பகுதியில் வால் துண்டிக்கப்பட்டுள்ளதால் 4 அடி நீளமே உள்ளது எனவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.