
திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் குருவியை விழுங்கிய பச்சைப்பாம்பு பத்திரமாக மீட்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் சூரக்கும் வது ஊராட்சி சம்பக்குளம் கிராமம் கிழக்குத்தெருவில் தங்கராஜ்
தனது வீட்டில் உள்ள மரத்தில் பச்சைப்பாம்பு ஊர்ந்ததை பார்த்துள்ளார். மரத்திற்கு அருகே சென்று உற்றுப் பார்த்ததில் பச்சைப் பாம்பு பெரிதாக இருந்ததால்தங்கராஜ் அச்சம் அடைந்தார். உடனே வீட்டில் இருந்து வந்த அனைவரும் பச்சை பாம்பை பார்த்து இவ்ளோ பெரிய பச்ச பாம்பா என ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருநகர் பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுவை தொடர்பு கொண்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபு குருவியை விழுங்கிய நிலையில் தலையைத் தூக்கி நின்று தாண்டவம் ஆடிய பெரிய பச்சைப்பாம்பை லாபகமாக மீட்டு நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள வனப்பகுதிக்குள் விடுவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.