
24×7 பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க வானவில் மையம்: கலெக்டர் சங்கீதா திறந்து வைத்தார்
கூத்தியார்குண்டு கிராமத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், புகார் அளிக்க `பாலின வள மையம்’ என்ற வானவில் மையத்தினை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மாவட்டத்தில் திறக்கப்பட்ட முதல் பாலின வள மையம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் நிலையூர் ஊராட்சியில், கூத்தியார்குண்டு கிராமத்தில் கண்ணாத்தாள் நகரில் மகளிர் திட்டம் மூலம் `பாலின வள மையம்’ என்ற வானவில் மையம் அமைக்கப்பட்டது. இதில் மகளிர் திட்டத்தின் உதவி அலுவலர் குபேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியரும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனருமான மோனிகா ரானா அவர்கள் தலைமையேற்றார். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி மையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாலின மையத்தைத் தொடங்கி முதன்மையான பாலினப் பாகுபாடு பிரச்னைகளை அடையாளம் கண்டு தீா்வு காண வேண்டுமென இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்கு இளம் வயதில் திருமணம், சிறு குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை, குடும்பப் பிரச்னைகள், 14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை போன்றவற்றைத் தடுப்பதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
கிராமப்புறங்களில் நடக்கும் பாலியல் தொடா்பான பிரச்னைகள் பற்றிய தகவல்களை சமூக நலத் துறை மூலம் பாலின வளமையும், வானவில் மையத்துக்குத் தெரியப்படுத்தலாம். மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களை அழைத்து வந்து இந்த மையத்தில் குறுகிய காலம் தங்க வைத்து, அவா்களின் பிரச்னைகள் குறித்த முழு விவரங்களைக் கேட்டு, தீா்வு கண்டு தேவையான ஆலோசனை வழங்கி மீண்டும் அவா்களை குடும்பத்துக்கு அனுப்பி வைப்பதே இம்மையத்தின் முக்கியப் பணியாகும் என்றாா். தொடா்ந்து பாலின வன்முறை தவிா்த்தலுக்கான பிரச்சார உறுதியேற்கப்பட்டது.
இந்த மையத்தின் செயல்பாடுகள்:
பாலின வள மையமானது வட்டார அளவில் அர்ப்பணிப்புடன் கூடிய நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் ஆண் பெண் குழந்தைகள் பாலின துன்புறுத்தல் தீர்வு காண்பதற்கும் பெண்களின் குடும்ப பிரச்சனை வன்கொடுமைகளில் இருந்து மீட்க தீர்வு காணும் ஒரு மையமாக செயல்படும். இது 24 மணி நேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடிய ஒரு மையமாகும். இந்த மையத்தின் அலுவலராக தனி மேலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளும் உள்ளது தங்குவதற்கு இரண்டு படுக்கைகள் பொழுதுபோக்கிற்கு நல்ல புத்தகங்கள் தொலைக்காட்சி போன்றவை இங்கு உள்ளது. இந்த மையம் திருப்பரங்குன்றம் வட்டாரத்துக்கு மட்டுமின்றி நம் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாப்பு அரணாக செயல்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்கு நாம் அரசுத்துறை சார்ந்த சமூக நல அலுவலகம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஒருங்கிணைந்த கொலைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் இலவச சட்ட ஆலோசனை மையம் காவல்துறை மருத்துவ அலுவலர்கள் இந்த பாலின வளமையத் துறை இணைந்து செயல்படுவார். இந்த மையம் பாதிக்கப்பட்ட பெண் தன்னிச்சையாக செயல்படும் அளவிற்கு ஆலோசனைகளை வழங்கி பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கான வழிவகைகளை செய்யும் என தெரிவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேட்டையன், சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஒங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, நிலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பசும்பொன் மற்றும் மகளிர் திட்ட உதவி அலுவலர் ஜோசப் ரத்தினராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.