திருப்பரங்குன்றம் அருகே கண்மாயில் மிதந்த ஆண் சடலம்… தீயணைப்பு துறையினர் மீட்பு – போலீஸ் விசாரணை!
திருப்பரங்குன்றம் அருகே கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் பிணம் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது இறந்தவர் யார்? இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோப்பூர் கண்மாய்க்குள் மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் தண்ணீருக்குள் மிதந்தபடி ஆண் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஊருக்குள் வந்து பெரியவர்களிடம். தெரிவிக்க அவர்கள் ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்மாயில் சென்று பார்த்த போது உடல் தலைகுப்புற இருந்ததால் யார் என அடையாளம் தெரியவில்லை. மேலும் உடல் தண்ணீரில் அழுகிய நிலை கிடந்ததால் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
திருப்பரங்குன்றம் தீயணைப்புத்துறையினர் இறந்த ஆணின் உடலை மீட்டனர்.
உடலை மீட்டு ஆய்வு செய்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஆண் என்பது தெரியவந்தது மேலும் இறந்தவர் உடல் தலைக்குப்புற கவிழ்ந்து முகம் மீன்கள் மற்றும் பூச்சிகள் கடித்து சிதைந்த நிலையில் இருந்ததால் இறந்தவர் யார் என அடையாளம் தெரியவில்லை. இதனை தொடர்ந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? கொலை செய்யப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.