
மதுரை கூத்தியார்குண்டு அருகே இளைஞர் வெட்டிக் படுகொலை; ஐந்து பேர் கொண்ட கும்பல் வெறிச் செயல்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கூத்தியார்குண்டு – கருவேலம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத நபர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் திருமங்கலம் டி.எஸ்.பி வசந்தகுமார் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருநெல்வேலியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் எனது மகன் கிருஷ்ணகுமார் வயது 30 திருநெல்வேலி நகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று மதுரை கூத்தியார் குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணகுமாரை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சம்பவ இடத்தில் ஆஸ்டின் பட்டி காவல் துறையினர் மோப்பநாய் உடன் கொலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.