
கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி சிறுவர்கள் நேர்த்திக்கடன்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு அருள்மிகு சுந்தரவள்ளி அம்மன் திருக்கோயில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த அக்டோபர் 10ம் தேதி தொடங்கியது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 108விளக்கு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 100க்கும் மேற்பட்டோர் அகத்தியர் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறுவர்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வேப்பிலை ஆடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இன்று மாலை பொங்கல் இடுதல் மாவிளக்கு பூஜையும், புரட்டாசி பொங்கல் விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மாலை முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.