
மதுரை வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக பயின்ற மாணவிகளுக்கு ஊக்கதொகை வழங்கி கௌரவிப்பு.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தொகுதிக்குட்பட்ட மேட்டுநீரேத்தான் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ., மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி கௌரவிப்பு. அதே போல் கடந்த கல்வியாண்டில் பள்ளியில். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா 10,000., 7000., 5000 என ஊக்கத் தொகை வழங்கி சிறப்பித்தனர்.வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலரும்., அதிமுக நகர செயலாளருமான அசோக் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த அருணா அம்மா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் தமையேந்தி., வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கே.எஸ்.இளங்கோவன்., கீதா சரவணன்., சூர்யா அசோக்குமார்., பிரியதர்ஷினி., பஞ்சம்மாள்., வெங்கடேஸ்வரி., அதிமுக முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் க.சோனை அம்பலம் கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.