
மதுரை அருகே கூத்தியார்குண்டு அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகேயுள்ள தோப்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (58) என்பவர் கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பிய போது பேக்கரி அருகே, அந்த வழியாக வந்த கூத்தியார்குண்டை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது இருசக்கர வாகனம் மோதியதில் ராம்குமார் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.