மதுரை தெற்கு மாசி வீதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்து வருகிறது

இன்று காலை 8.15 மணியளவில் தெற்கு மாசி வீதி மறவர் சாவடி அருகே பிளாஸ்டிக் கடையின் மேல் மாடியில் உள்ள குடோனில் தீ பிடிக்க தொடங்கியது. உடனே வந்த சுமார் 30க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.இந்த தீ விபத்தால் வெளியான கரும்புகை அப்பகுதியில் பரவியது.தொடர்ந்து தற்போது வரை தீயணைப்பு வீரர்கள் செயலாற்றி வருகின்றனர்.
6 தீயணைப்பு வண்டிகள் , 10 மேற்பட்ட மாநகராட்சி தண்ணீர் லாரி ஆயிரம் லிட்டர் நுரை கரைசல் கொண்டு தீயணைக்கும் பணி தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேலும் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி பரபரப்புடனே காணப்படுகிறது.
படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.