
திருப்பரங்குன்றம் அருகே திமுக சார்பில் திறக்கப்பட்ட நீர், மோர் பந்தல் – மாங்கனிகள், இளநீர், உள்ளிட்டவற்றவை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர் – 51 மரக்கன்று நட்டு வைத்தும் விழா கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் கிராமத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில், திமுக சார்பில் கோடை வெப்பத்தின் தாகத்தை தணிக்கும் வகையில், பொதுமக்களுக்கு நீர் , மோர் பந்தல் திறக்கப்பட்டது . திறப்பு விழாவில் திமுக ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில், இளநீர், பழங்கள், மாங்கனி உள்ளிட்ட பல வகைகளை பொதுமக்களுக்கு அளித்து மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள சாலையோரத்தில் இருபுறங்களிலும் திமுகவினர் பலவகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தும் மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை தனக்கன்குளம் திமுக நிர்வாகி பால்பாண்டி செய்திருந்தார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.