
ஈழத்தமிழர்கள் முகாமில் தீ விபத்து… வீடு முழுவதும் எரிந்து சேதம்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த உச்சப்பட்டியில் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இதில் சுமார் 500 வீடுகள் உள்ளது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வசித்து வருகின்றனர். வீட்டு எண் 267-ஐ சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கூலிதொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது தாயார் மற்றும் மகனுடன் தகர சீட்டு வீட்டில் வசித்து வந்தார்.
வீட்டில் தீ விபத்து:
நேற்று இரவு 8 மணியளவில் வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. ஆனந்தன் வேலை தொடர்பாக வெளியே சென்றிருந்தார்.
பின்னர் அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். வீட்டில தீ மள மளவென்று பற்றி எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொருட்கள் எரிந்து சாம்பல்:
சிறிது நேரத்தில் அங்கு வந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில், வீட்டில் இருந்த பிரிட்ஜ், டி.வி., சமையல் பாத்திரங்கள், துணிமணிகள், சான்றிதழ்கள், ஆதார்கார்டு உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.
இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.