
மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பள்ளி… பொதுமக்கள் அவதி
மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து தனியார் பள்ளி வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் கண்மாய்க்குள் (மதுரை-விருதுநகர் மாநில நெடுஞ்சாலை தனக்கன்குளம் அருகே) மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து தனியார் பள்ளி கட்டப்பட்டுள்ளது.
இதனால் மழைநீர் வடிகால் எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை.
மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், நீர்நிலைகளுக்கு செல்லாமல் ரோட்டின் ஓரங்கள்,குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுப்பணித்துறையினர் தலையீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் கால்வாய்களை சரி செய்யுமாறு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மழை நீர் வீணாகாமல், கண்மாய்க்கு சென்று, விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருந்திருக்கும். எனவே ஏரி, குளங்களுக்கு செல்லும் மழைநீர் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும் என, பொதுமக்கள்,விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.