விவசாய நிலத்தை கையகப்படுத்தும் ஸ்டாலின் அரசு! எங்களை காப்பாற்றுங்கள்…சீமானுக்கு கண்ணீர் மல்க விவசாயி கடிதம்!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்யும் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது. மெட்ராஸ் நகரத்தின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்ய “நகர மேம்பாட்டுப் பொறுப்பாட்சிக் குழுமம்” என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பாக 1947 ல் உருவாக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் வீட்டுவசதி துறையில் அதிகரித்து வரும் தேவைகளை சமாளிக்க 1961 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் என்ற ஒரு முழு அமைப்பாக உருவாக்கப்பட்டது.

வீட்டுவசதி என்பது, மக்களின் இன்றியமையாத தேவையாகும், மனிதன் பாதுக்காப்பாக வாழ்ந்திடவும், சமுதாயத்தின் அங்கமாக நிலை பெறவும் வீட்டுவசதி என்பது மிகவும் அவசியம் ஆகிறது. மேலும் வீட்டு வசதிக்கான முதலீடு, மற்ற தொழில் முதலீடுகளைக் காட்டிலும் பன்மடங்கு வருவாயும் ntiy வாய்ப்பும் உருவாக்குதல், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாகவும் விளங்குகிறது.

வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் “அனைவருக்கும் வீடு” என்ற சிறந்த நோக்கத்துடன் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கொள்கையின் ஒரு அங்கமாக கட்டுமானத்தில் தரமான பொருட்களை உறுதி செய்கிறது. கட்டுமானத்தில் சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவு (EWS), குறைந்த வருவாய் பிரிவு (LIG) , மத்திய வருவாய் பிரிவு (MIG) மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு (HIG) வீடுகள் வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றது.

இந்நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைந்துள்ளது. வீட்டு வசதி வாரியத்தின் விரிவாக்கத்திற்காக மேலும் பல இடங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக சுமார் ஐந்து ஏக்கர் உள்ள விவசாய நிலத்தையும் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் விவசாயம் செய்யும் இடத்தை நாங்கள் ஒருபோதும் தர மாட்டோம் என்று பல வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர் ஆனால் அவர்களின் குரலுக்கு அரசு அதிகாரிகள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை மேலும் அவர்களை காவல்துறையை வைத்து மிரட்டி மின் இணைப்பை துண்டித்து விடுவோம் நீங்கள் விவசாய நிலத்தை விட்டு வெளியேறுங்கள் என அச்சுறுத்துகின்றனர்.

இதனால் பகுதியை சேர்ந்த விவசாயிகள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு,விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து போராடி பெற்றுத் தர வேண்டும் என கடிதம் எழுதி உள்ளனர். நாளைய தமிழகத்தை வழிநடத்திச் செல்ல இருக்கும் மாபெரும் இயக்குனரும் வருங்கால நிரந்தர தமிழக முதல் தமிழ் முதல் வருமான மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு,அன்புத்தம்பி வணக்கமாய் எழுதிக்கொண்ட கோரிக்கை விருப்ப மனு.

நான் ஒரு ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்.தோப்பூர் கிராமத்தில் என் பாட்டி கலுவாய் அம்மாளுக்கு சொந்தமான சர்வே எண் 42/2ல் 5 ஏக்கர் நிலம் உள்ளது.இது 1931 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இதனால் வரை விவசாய பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிலத்தை கையகப்படுத்தியது.வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகிறது.இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

1988 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக ஒரு தடை ஆணையை (Stay order) பெற்று விவசாய பணியை தொடந்தோம்.

நிலத்தை வாரியத்திற்கு முறையாக ஒப்படைக்கவில்லை.இழப்பீட்டுத் தொகை எதுவும் பெறவில்லை.

ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் வாரியம் மரங்கள் (பலன் வந்து கொண்டு இருந்த 80 தென்னை, 95 புளியமரம்) வீடு மாட்டு பண்ணை கோழி பண்ணை அனைத்தையும் வாரியம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை துணையோடு அகற்றப்பட்டது.

பத்திரம் பட்டா இவைகளை காட்டிய போது அதெல்லாம் மாறிப்போச்சு வாரியம் பெயருக்கு கிராமம் எஃப்.எம்.பி மாறியாச்சு உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டார்கள்.

என் தந்தையும் தாயும் பெருத்த கவலையாக காலமாகி விட்டார்கள்.எனக்கு அதிக மன உளைச்சல் பொன் விளையும் மண்ணை நான் இழக்க விரும்பவில்லை.மேலும் நான் என் பரம்பரைக்கே கடைசி விவசாயி.

எனக்கு பெருத்த இழப்பு என்று வாதம் செய்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தடையாணை பெற்று விவசாய பணியை தொடர்ந்தேன்.

தற்போது தென்னை 80, தேக்கு 100, முருங்கை 100, பப்பாளி 50, எலுமிச்சை 5, நார்த்தை 5, சப்போட்டா 3, மா 3, என்று ஏராளமான மரங்கள் பலன் தரும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் தாய் மண்ணை விட்டு வெளியேற முயற்சி நடந்து வருகிறது.மின் இணைப்பை துண்டித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் விவசாயம் செய்யாதே வெளியேறு என்று தொந்தரவு செய்கிறார்கள்.

கடந்த நூறு வருடங்களாக இருந்து வரும் என் தாய் மண்ணை விட்டு நாங்கள் எங்கே செல்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறேன்.

கையகப்படுத்திய விவசாய இடங்கள் புறம்போக்கு இடங்கள் அனைத்து அதிகாரிகள் உதவியோடு அரசியல்வாதிகளுக்கும் அவர்களது நட்பு உறவு முறைகளுக்கும் கைமாற்றப்பட்டு பெருத்த மெகா ஊழல் நடந்து இருக்கின்றது.

இது பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ஒரு பிரதி பாரதப் பிரதமர் அவர்களுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளேன்.இந்தப் பிரதி ஒன்று தங்கள் மேலான கவனத்திற்கு பணிந்து இணைத்துள்ளேன்.கடந்த 1988 ஆம் ஆண்டில் இருந்து இந்நாள் அடிமை இந்தியாவில் பெற்ற தாய் மண்ணை சுதந்திர இந்தியாவின் மீட்க தனி மனிதனாக போராடி வருகிறேன் தனி மரம் தோப்பு ஆகாது ஆனால் ஒரு தனி மனிதன் ஒரு தோப்பை உருவாக்கி விட முடியும் என்று நம்பிக்கையில் இந்த தர்ம போராட்டத்திற்கு தங்கள் மேலான ஆதரவு வேண்டும் அன்புத்தம்பி என்று மதுரை மாவட்டம் தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணீர் மல்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

One thought on “விவசாய நிலத்தை கையகப்படுத்தும் ஸ்டாலின் அரசு! எங்களை காப்பாற்றுங்கள்…சீமானுக்கு கண்ணீர் மல்க விவசாயி கடிதம்!

Leave a Reply

error: Content is protected !!