FREE ENTRY: பனை பொக்கிஷத்தை மீட்டெடுக்க மதுரையில் மாபெரும் பனை ஓலை கண்காட்சி!

வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கமும் மிராக்கிள் ட்ரீ லைப் சயின்ஸ் இணைந்து நடத்தும் மாபெரும் பனை ஓலை கண்காட்சி மற்றும் பயிற்சியானது மதுரையில் நடைபெற உள்ளது.

மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவுத்தொழில் வர்த்தக மையத்தில் மே 25 முதல் 29 வரை பனை ஓலை ஓவிய கண்காட்சி மற்றும் ஓவியம் வரைவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைவர் ரத்தினவேலு கூறியதாவது: ஒடிசா மாநிலத்தில் பனை ஓலைப்பொருட்கள் தயாரிக்கும் கலை பிரபலமாக உள்ளது.

தமிழகத்தில் இந்த கலை அழிந்து வருகிறது. மே 21 முதல் 25 வரை தினமும் காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை பனை ஓலை வண்ண ஓவியங்களின் கண்காட்சியை பொதுமக்கள் பார்க்கலாம். அனுமதி இலவசம். பாரம்பரிய பனைஓலை வடிவமைப்பு கலையை மீட்கும் வகையில் பனை ஓலையில் உருவங்களை செதுக்கும் பயிற்சி கட்டணத்துடன் அளிக்கப்படுகிறது.

பனை ஓலை, வண்ணக்கலவை, பிற பொருட்கள், மதிய உணவு வழங்கப்படும். பனை ஓலையில் உருவங்கள் வரைந்து ஏற்றுமதி செய்யலாம் என்றார். தொடர்புக்கு: 94894 87296.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!