மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கன்னியாகுமரி – காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை எய்ம்ஸ் இணைப்பு சாலையில் இருந்து நான்குவழிச் சாலையை கடக்க முயன்ற கார், கூத்தியார்குண்டு பிரதான சாலையில், மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தின் மீது பக்கவாட்டில் திடீரென மோதி தடம் புரண்டு சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது கவிழ்ந்ததில், அருகே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்தவர்கள், டாட்டா ஏஸில் பயணம் செய்தவர்கள், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் நூலிலையில் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பினார்கள்.மருத்துவ சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.