கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகள் வாகனம் சென்றுகொண்டிருந்த போது மதுரை திருமங்கலத்தை அடுத்த நான்கு வழிச் சாலையில் உள்ள கீழக்குயில்குடி மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது ஒருவர் சாலையை கடந்து சென்றபோது, வாகனத்தை கட்டுப்படுத்த முயன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 15 பேரில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மீதமிருந்த 13 பேர் லேசான காயத்துடன் 108 அவசர ஊர்தி மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.