மதுரை திருப்பரங்குன்றம் அருகே சாலையைக் கடக்க முயன்ற இளம்பெண் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் கிராமத்தைச் சோ்ந்தவா் சோணையம்மாள் (45) தனது மகள் வெண்ணிலாவும் மதுரை இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் தோப்பூரில் உள்ள தனியார் டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் சனிக்கிழமை மாலை வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது சாலையைக் கடக்க முயன்றார்கள்.
அப்போது, அவ்வழியே திருமங்கலத்திலிருந்து மதுரை நோக்கி பெண் ஒருவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், அவர்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் அந்த பெண்ணும், அவரது தாயும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு 108 வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வெண்ணிலா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
அவரது தாய் சோணையம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிச்சை பெற்று வருகிறார்.இந்நிகழ்வு குறித்து ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.