
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூர் அரசு தொற்று நோய் மருத்துவமனைக்கு சென்றிடும் பாதை தடுப்புகளை கொண்டு நிரந்தரமாக மூடப்பட்டதால் சிகிச்சைக்கு சென்றிடும் நோயாளிகளும் பொது மக்களும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் தமிழகத்தின் மிகச்சிறந்த மருத்துவ மனைகளில் ஒன்றான அரசு தொற்று நோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதரும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வரு கின்றனர். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்தமருத்துவமனை அமைந்திருப்பதால் இங்கு தங்கிசிகிச்சை பெற்று செல்வதை நோயாளிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
இந்த மருத்துமனையின் அருகே அரசு திறந்தவெளி நெல்கொள்முதல் கிட்டங்கி, தனியார் பள்ளிகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த இடத்திற்கு மிக அருகாமையில் அமையவுள்ளது.இதனால் தோப்பூர் அரசு தொற்று நோய் மருத்துவமனைக்கு சென்றிடும் சாலையில் வாகனங்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் திருமங்கலம்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மிசோரியோர் ஆலையின் பின்புறம் அதிமுக 100அடி கொடிக்கம்பம் அமைந்துள்ள இடத்தின் வழியாக தோப்பூர் அரசு தொற்று நோய் மருத்துவமனைக்கு சென்றிடும் சாலை அமைந்துள்ளது.
நான்குவழிச் சாலையில் குறுக்கிடும் இந்த சாலையை பயன்படுத்தி பொதுமக்களும் நோயாளிக ளும் அரசு மருத்துவமனைக் கும் அப்பகுதியிலுள்ள பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கும் செல்வது வழக்கம்.
50ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்து வரும் இந்த சாலை பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் தோப்பூர் அரசு மருத்துவமனைக்கு இரும்பு தடுப்புகளை கொண்டு நிரந்தரமாக மூடி விட்டது. இதனால் தோப்பூர் பாலத்திற்கு ஒரு வழிப்பாதையில் எதிரே செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டு வரும் நான்கு வழிச்சாலை தனக்கன்குளம் பகுதியை அடைத்திடாமல், நோயாளிகள் செல்வதற்கு வசதியாக இருந்த சாலையை கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் நிரந்தரமாக மூடியதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும்,சுகாதாரத்துறையும் உடனடியாக தலையிட்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தோப்பூர் அரசு தொற்று நோய்மருத்துவமனைக்கு சென்றிடும் பாதையை பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.