
கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது . இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் பூரண நலத்துடன் வீடு திரும்பி மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து தொண்டர்கள் பிரார்த்தனை செய்தது காண்போரை கண் கலங்க வைத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.