
கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள்முக்கிய சுற்றுலா இடங்களுக்குச் செல்ல பயன்படுத்தும் சாலையாக அப்சர்வேட்டரி பிரதான சாலை இருந்து வருகிறது.
இந்த சாலையின் வழியாக மட்டுமே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா பகுதிகளான மோயர்சதுக்கம், தூண்பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரமுடியும். இந்த நிலையில் அப்சர்வேட்டரி சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலை பராமரிப்பு செய்யும் போது அகற்றப்படும் கற்கள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருவதால் சாலை குறுகி வருகிறது. முறையாக சாலை பராமரிக்கப்படாமலும் இருந்து வருவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்து வருகிறது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் மேல் மலை கிராம மக்கள் பயன்படுத்தும் அப்சர்வேட்டரி பிரதான சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.