ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் ஓட்டி வந்த லாரி பறிமுதல்… லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

நாகர்கோவில் தோட்டியோடு அருகே போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் குடிபோதையில் லாரி ஓட்டி வந்த டிரைவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் காவல் துணைக்கண்காணிப்பாளர் தங்கராமன் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் தோட்டியோடு பகுதியில் நடந்த வாகனச் சோதனை மேற்கொண்ட போது, அந்த. வழியாக வந்த 12 சக்கர லாரி அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இடையூறு செய்ததாக வந்த புகாரையடுத்து லாரியை வழிமறித்து, சோதனை மேற்கொண்டதில் லாரி டிரைவர் முருகன் குடிபோதையில் இருந்தாக தெரியவந்தது.
பின்னர் பிரீத் அனலைசர் மூலம் மூச்சு பரிசோதனை செய்தபோது 200 மி.கிராம் அளவிற்கு ஆல்கஹால் அளவு அவரது உடலில் இருந்ததால், லாரி டிரைவர் மீது குடிபோதையில் வாகனம் இயக்குதல், அவசர வாகனங்களுக்கு வழிவிட மறுத்தல் ஆகிய போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு விதிமீறலில் ஈடுபட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.