ஊர்க்காவல் படை வீரரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய கமாண்டர்!

ஊர்க்காவல் படை வீரரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய கமாண்டர் !

திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊர் காவல்படையில் பணிபுரிந்து வருபவர் அஜித்குமார். பழனி காவல்துறையில் கமாண்டர் படையில் பணியாற்றி வரும் செல்வமாரி என்பவர் ஊர்க்காவல்படை காவலரான அஜிகுமாரை சாதி பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி அவமானப்படுத்தியதாக தெரியவருகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாத அஜித்குமார் விஷ மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சாதி பெயரைச் சொல்லி தரக்குறைவாகப் பேசிய கமாண்டர் படையைச் சேர்ந்த செல்வமாரி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அருந்ததியின நலச்சங்கத்தின் தலைவர் நாகராஜ் தலைமையில், புலிகள் கட்சி நிர்வாகிகள், அருந்ததியர் சமுதாய நலச்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் டி.எஸ்.பி. சரவணனிடம் புகார் மனு அளித்துள்ளனர். காவல்துறை கமாண்டர் ஊர்க்காவல் படை காவலரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!