இனி சில்லறை தேட வேண்டாம் – பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்!

 சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மின்னணு டிக்கெட்

இது தொடர்பாக  சென்னை மாநகர பேருந்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னையில் உள்ள 22 டிப்போக்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி சில்லறை தேட வேண்டாம் - பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்! | Upi To Buy Tickets In Chennai City Buses

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் இப்போது அனைத்து டெப்போக்களிலும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் யுபிஐ, கார்டு மற்றும் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.

எம்டிசி பேருந்துகள்   

இதற்காக நடத்துநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை எம்டிசி பேருந்துகளில் பொதுமக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணிக்கலாம். சென்னை பேருந்துகளில் பயணிப்போர் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இனி சில்லறை தேட வேண்டாம் - பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்! | Upi To Buy Tickets In Chennai City Buses

பேருந்துகளில் பயணிக்கும் போது சிக்கல் ஏற்பட்டால் அல்லது இதில் சந்தேகங்களுக்கு 149 என்ற எண்ணைப் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!