வெள்ள நிவாரணத் தொகையை தரமறுத்த இன்ஜினியருக்கு கத்திக்குத்து..!
சென்னை வியாசர்பாடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (51). இவர் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு இவரது முதல் மனைவி உடல் நலக்குறைவால் காலமானார்.
இதனால் அன்பழகன் மகாலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கிய நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு அன்பழகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி மகாலட்சுமி தனது கணவரிடம் நிவாரணத் தொகை ரூபாய் 6 ஆயிரத்தைக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு அன்பழகன், ‘ஏற்கெனவே முதல் மனைவி நகைப் பொருட்களை விற்றுவிட்டாய், இப்போது இந்த பணத்தை உன்னிடம் தர வேண்டுமா?’ என மனைவியிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவர் அனபழகனை வயிற்றில் குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த
உறவினர்கள் அவரை மீட்டு பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், செம்பியம் போலீஸார் அன்பழகனிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார், மகாலட்சுமியை கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.