கொடைக்கானல் மேல்மலை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை – மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்

கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை அடுத்து உள்ளது கூக்கால் கிராமம் . கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றும் சாரல் மலையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது. இன்று காலை மேல் மழை பகுதிகளில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது இதை அடுத்து கூக்கால் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் இன்று காலை ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

ராட்சத மரம் மின் வயர்களில் விழுந்ததால் 3 மின் கம்பங்கள் சேதமாயின. மின்கம்பங்கள் சேதமானதை தொடர்ந்து கூக்கால் குண்டு பட்டிகுண்டு பட்டிகாலணிகள் பழம்புத்தூர் மற்றும் புதுப்புத்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

அதேபோல இந்த ராட்சத மரம் பிரதான சாலையில் விழுந்ததால் இந்த மலை கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. மின் கம்பம் முறிந்து விழுந்ததில் கூக்கால் கிராமத்திற்கு குடிநீர் விநியோகிக்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. மின்வாரியத்தினர் மற்றும் கூக்கால் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மரத்தையும் சேதமான குடிநீர் குழாயையும் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேதமான மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்சார வாரியத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்

.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!