Lockdown-மீண்டும் ஊரடங்கு.? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா இல்லையா என்பது குறத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.இந்தச் சூழலில் கடந்த ஓரிரு வாரத்தில் வட மாநிலங்களிலும், சென்னை ஐஐடியிலும் மீண்டும் கொரோனோ பரவல் அதிகரித்துள்ளன. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்’ என தமிழக முதல்வர் மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக மருத்துவத்துறை செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் பேசியது என்னவென்றால்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல், தமிழக அரசின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்கர்ர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!